பெரம்பூர்: வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே கஞ்சா விற்ற ஓட்டேரி அனுமந்தராயன் கோயில் தெருவை சேர்ந்த விஜய் (எ) புலிப்பாண்டி (28), செம்பியம் பகுதியை சேர்ந்த சின்னசாமி (எ) சின்னா (28), வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா (27), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் (23), வியாசர்பாடி தாமோதரன் நகரைச் சேர்ந்த அஞ்சலை (50) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (எ) சுனாமி சூர்யா (26), கொடுங்கையூர் ஆர்.ஆர் நகரை சேர்ந்த செல்வகுமார் (எ) டோலக் (25) ஆகியோரை, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்ற 7 பேர் கைது
0