பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியிலிருந்து வேலப்பன்சாவடி செல்லும் சாலையில் நேற்றுமுன்தினம் பூந்தமல்லி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில் வந்த நபரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரித்தபோது அவர் திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியை சேர்ந்த ஜெயசிம்மா (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, 140 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாலிபரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.