சென்னை: சென்னை பெரியமேடு கால்நடை மருத்துவமனை அருகே நேற்று முன்தினம், பெரியமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் உயர் ரக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், சிதம்பரம் பகுதியை சேர்ந்த நூரூல் ஹாலிப் (34) மற்றும் இம்தியாஸ் அகமது (32) எனவும், இவர்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை, மேற்கண்ட பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.