மதுரை: மதுரை, தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(50). இவர் கடந்த 14.11.2021ல் வைகை வடகரை, காமாட்சி நகர் சந்திப்பு அருகே 22 கிலோ 700 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தபோது செல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் விசாரித்து கணேசனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.