Thursday, February 29, 2024
Home » விடுதி கண்காணிப்பாளர் உட்பட 18 காலி பணியிடங்களுக்கு 1,638 பேர் போட்டி: சென்னை, கோவை, மதுரையில் தேர்வு

விடுதி கண்காணிப்பாளர் உட்பட 18 காலி பணியிடங்களுக்கு 1,638 பேர் போட்டி: சென்னை, கோவை, மதுரையில் தேர்வு

by Ranjith

சென்னை: விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் உட்பட 18 காலி பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 1,638 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணியில் காலியாக உள்ள 18 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி வெளியிட்டது. தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இத்தேர்வுக்கு 1,638 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆண்கள் 1242 பேர், பெண்கள் 396 பேர். இப்பணிகளுக்கான கணினி வழித் தேர்வு நேற்று நடந்தது. சென்னை, மதுரை, கோவையில் இந்த தேர்வு நடந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(பட்டப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. அதாவது, கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு(10ம் வகுப்பு தரத்திலும்), பொது அறிவு தேர்வும் நடந்தது. தேர்வு நடைபெற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

You may also like

Leave a Comment

12 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi