Thursday, April 18, 2024
Home » வேட்பாளர் தேடும் அதிமுக… தெறித்து ஓடும் நிர்வாகிகள்

வேட்பாளர் தேடும் அதிமுக… தெறித்து ஓடும் நிர்வாகிகள்

by Arun Kumar

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜவில் இணைந்ததால், எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதிக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கிறது. தற்போது முதல்முறையாக இடைத்தேர்தல் நடக்கும் விளவங்கோடு தொகுதியில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே களமிறங்கும் என தெரிகிறது.

அந்த கட்சியின் சார்பில் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டு சீட் பெறுவதற்கான முயற்சியில் உள்ளனர். பாஜவை பொறுத்தவரை கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஜெயசீலனுக்கு வாய்ப்பு என்றே கூறுகிறார்கள். ஆனால் அதிமுக நிலைமையோ பரிதாபமகா உள்ளது. வேட்பாளரை தேடும் நிலைக்கு அந்த கட்சி தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த கட்சியில் 2016 சட்டமன்ற தேர்தலில் நாஞ்சில் டோமினிக் போட்டியிட்டு வெற்றி வாய்பை இழந்தார். அதிமுக சார்பில் அவர் 2 முறை நின்று வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். மாற்று கட்சிக்கு சென்று விட்டு தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். இவருக்கு இன்னும் கட்சியின் உறுப்பினர் கார்டு கூட வழங்கப்படவில்லை. எனவே இவருக்கு வாய்ப்பு இல்லை என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்.

தேசிய கட்சிகளுக்கு இடையே தனித்து நின்று போட்டியிட்டால் எதுவும் நடக்க போவதில்லை. டெபாசிட் கிடைக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது. எனவே இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்க அதிமுகவினர் தயக்கம் காட்டி வருகிறார்கள். அப்படியே நின்றாலும் கூட பெயரளவுக்கு தான் நிற்க வேண்டி வரும். மேலும், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடப்பதால், கட்சியில் இருந்தும் பெரிய கவனிப்பு இருக்காது. எனவே இந்த தேர்தலில் வேட்பாளராக களமிறங்க அதிமுகவினர் தயக்கம் காட்டி வருகிறார்கள். எனவே யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதில் அதிமுகவினர் குழம்பி போய் உள்ளனர்.

இதுமேற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் ஜாண் தங்கத்தின் சொந்த தொகுதியாகும். தொடர்ந்து மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இவர் தான் உள்ளார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் இவரது சொந்த பூத்தில் மிக, மிக குறைந்த வாக்குகள் தான் அதிமுகவுக்கு கிடைத்தது. அதிமுகவின் வளர்ச்சிக்கு பெரிதாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிருப்தி, இவர் மீது கட்சி தலைமைக்கு உள்ளதாக தொண்டர்கள் பேசுகிறார்கள். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற ஆலோசனை நடக்கிறது.

கட்சியின் மாநில மகளிரணி துணை செயலாளராக இருக்கும் ராணியை களமிறக்கலாமா? என்ற யோசனையில் உள்ளனர். ஆனால் இவர் இந்த தொகுதிக்குள் வர மாட்டார்? அவர் தடிக்காரன்கோணத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது நாகர்கோவிலில் உள்ளார். இவரை தவிர்த்து சுதர்சன், எட்வர்ட் உள்ளிட்ட பெயர்கள் அடிபடுகின்றன. இதில், எட்வர்ட், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மேல்புறம் ஒன்றிய தலைவர் ஆவார். மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன் அதிமுகவில் இணைந்தார். எனவே இவரை வேட்பாளராக நிறுத்துவதற்காகவே கட்சியில் இணைத்துள்ளனர் என்ற பேச்சும் எழுந்தது. கட்சியில் சேர்ந்தவுடன் வேட்பாளராக அறிவித்து விடலமா? என்ற குழப்பமான மன நிலையில் கட்சி தலைமை உள்ளது. யாரை நிறுத்தினாலும் சொற்ப ஓட்டுக்கள் தான் கிடைக்கும் என்பதால் கட்சி தலைமையும் பலத்த யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

* விருப்ப மனுக்கள் வாங்கியவர்கள் ஓட்டம்

கடந்த மாத இறுதியில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் இருந்து அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. இதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட நீலகிரியை சேர்ந்த பலரும் விருப்ப மனுக்களை பெற்றனர். விருப்ப மனுகள் பெற்று சென்றவர்களை அழைத்து நீலகிரி தொகுதியில் போட்டியிடுமாறு அதிமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக கூட்டணி பலமாக உள்ள நிலையில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா? என்று அதிமுகவினர் ‘பேக்’ அடிக்கிறார்கள். விருப்ப மனுக்கள் பெற்றவர்கள் அதிமுக தலைமையிடம் இருந்து அழைப்பு வந்தாலே தலைதெறிக்க ஓடுகின்றனர். இதனால் கடந்த முறையைபோல் நீலகிரி தொகுதிக்குட்பட்ட சமவெளி பகுதிகளை சேர்ந்த யாரையாவது நிற்க வைக்கலாமா? என்று அதிமுக தலைமை ேயாசனை செய்து வருகிறது. இதே நிலைமைதான் அதிமுகவுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ளது. வேட்பாளராக நிற்க சொல்லி எடப்பாடி போன் செய்தாலே நிர்வாகிகள் அலறி ஓடுகின்றனர்.

You may also like

Leave a Comment

9 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi