கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி நகராட்சியில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதா நவாப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 வட மாநில தொழிலாளர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.