Wednesday, July 24, 2024
Home » நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கும்: மாணவர் பெருமன்றம் அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கும்: மாணவர் பெருமன்றம் அறிவிப்பு

by Arun Kumar


சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் வரையில் ஜனநாயக முற்போக்கு கட்சிகளையும் இணைத்து போராட்டத்தை நடத்துவோம் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடக்கும் குளறுபடிகளை கண்டித்தும், தேசிய தேர்வு முகமையிடம் விசாரணை நடத்தக்கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் தினேஷ் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ்கஜேந்திரபாபு, சமூக சமத்துத்துத்துக்கான மருத்துவர் சங்கத்தின் மாநில செயலாளர் ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் தினேஷ் கூறுகையில், ‘‘நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அல்லது தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் மாநிலங்களுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ஜனநாயக முற்போக்கு கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி, இந்திய மாணவர் அமைப்பு, திராவிடர் கழகம் மாணவர் அமைப்பு என அனைத்து முற்போக்கு மாணவர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை நடத்த இருக்கிறோம். நீட் தேர்வு ரத்து செய்யும் வகையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ஒருங்கிணைப்பில் இருக்கின்ற அனைத்து அமைப்புகளும் தொடர்ந்து போராடும்.

 

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi