ஒட்டாவா: கனடா நாட்டில் தமிழ் பெண் உள்பட 2 இந்திய வம்சாவளி பெண்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டின் பிரதமராக மார்க் கார்னே நேற்றுமுன்தினம் பதவியேற்றார். இந்த நிலையில் 24 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிறந்த கமல் கேரா(36) மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த அனிதா ஆனந்த்(58) ஆகியோர் இரண்டு அமைச்சர்களாவர். கமல் கேராவுக்கு சுகாதார துறை வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பள்ளிக்கூடத்தில் படித்து கொண்டிருந்த போது கமல் கேராவின் குடும்பம் கனடாவுக்கு புலம் பெயர்ந்தனர். கடந்த 2015ம் ஆண்டில் முதல் முறையாக பிராம்ப்டன் மேற்கு தொகுதியில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அனிதா ஆனந்திற்கு(58) கண்டுபிடிப்புகள்,அறிவியல் மற்றம் தொழில்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது. அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள். இதற்கு முந்தைய ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார்.
கனடா புதிய பிரதமர் பதவியேற்பு தமிழ் பெண்ணுக்கு அமைச்சர் பதவி: 2 இந்திய வம்சாவளிக்கு அமைச்சரவையில் இடம்
0