மார்க்கம்: கனடா ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று, இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அபார வெற்றி பெற்று பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். கனடாவில் உள்ள மார்க்கம் நகரில் கனடா ஓபன் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. இந்திய நேரப்படி நேற்று காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்தன. அதிலொரு ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீன தைபேவின் டின் சென் சோ மோதினர். அதில் ஸ்ரீகாந்த் 21-18, 21-9 என நேர் செட்களில் வீழ்த்தினார். மொத்தம் 43 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் மூலம் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். தொடரின் முதல்நிலை வீரரான டின் சென் உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் இருக்கிறார். வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் உலகத் தரவரிசையில் 49வது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் மற்ற இந்தியர்களான சங்கர் முத்துசாமி ஆண்கள் ஒற்றையர் பிரிவு, ஸ்ரீயன்ஷி வலிசெட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்களில் தோற்று ஏமாற்றமளித்தனர். இந்திய நேரப்படி இன்று நடக்கும் அரையிறுதியில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோ (12வது ரேங்க்) உடன் ஸ்ரீகாந்த் மோத உள்ளார். நிஷிமோடோ, காலிறுதியில் சங்கர் முத்துசாமியை வீழ்த்தியவர்.
கனடா ஓபன் பேட்மின்டன்: சீறிப் பாய்ந்த ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி
0
previous post