15கற்பூரவள்ளி இலைகள்
1 தக்காளி
5சாம்பார் வெங்காயம்
10 பல் பூண்டு
1 டீஸ்பூன் சீரகம்
1/4டீஸ்பூன் மிளகு
2 டேபிள் ஸ்பூன் வெந்த துவரம் பருப்பு
புளி சிறிய எலுமிச்சையில் பாதி
உப்பு தேவையான அளவு
தாளிக்க :
1டீஸ்பூன் நெய் அல்லது எண்ணை
1/4டீஸ்பூன் கடுகு, சீரகம்
2வற்றல் மிளகாய்
கறிவேப்பிலை
மல்லி இலை
செய்முறை
கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவு, சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.இரண்டு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பை குக்கரில், தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.புளியை கரைத்து சாறு எடுக்கவும்.தக்காளி, வெங்காயம், மல்லி இலையை நறுக்கி வைக்கவும்.வாணலியில் நெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், நறுக்கிய கற்பூரவள்ளி இலைகள், கறிவேப்பிலை, பூண்டு, வற்றல் சேர்த்து பொரிந்ததும், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, புளி சேர்த்து, அரைத்து வைத்துள்ள விழுது, வேகவைத்து வைத்துள்ள துவரம் பருப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும், மல்லி இலை தூவி இறக்கினால் மருத்துவ குணம் வாய்ந்த, சுவையான கற்பூரவள்ளி ரசம் சுவைக்கத்தயார்.