மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் ஊராட்சியில் தமிழக காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக,மத நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வேதாசலம் தலைமை தாங்கினார். மனித உரிமை பிரிவு எஸ்ஐ அமுதா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சாமிநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கலந்து கொண்டு பேசுகையில், ‘மாணவர்கள், பெண்கள், பொதுமக்களிடம் போக்குவரத்து விதிமுறைகள், மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் தீமைகள் குறித்தும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கைகள், சமூக வலைதளங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், புலனாய்வு மற்றும் நுண்ணறிவு பிரிவுகளின் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு சமூக மதநல்லிணக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவுதமி அரிகிருஷ்ணன், திமுக நிர்வாகி வேணு உள்பட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற நிர்வாகம் செய்திருந்தது.
வேடந்தாங்கல் ஊராட்சியில் சமூக, மத நல்லிணக்க விழிப்புணர்வு முகாம்
0
previous post