அவசர வாழ்க்கை, முறையற்ற உணவுப் பழக்கங்கள் என இன்று மன அழுத்தமில்லாத மனிதர்களே குறைவு எனலாம். மேலும் தூக்கமின்மை என்பது இன்று மிகச் சாதாரண பிரச்னையாகிவருகிறது. தூங்குவதற்கு முன் சுமார் 30 நிமிடங்கள் முன்பு மொபைல் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தூரம் வைக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனாலும் நம் வேலையும், வாழ்க்கை முறையும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. சரி நல்ல தூக்கம் வேண்டும், அமைதியான மனநிலை வேண்டும் என்போருக்காகவே காம் (Calm – Sleep, Meditate, Relax) செயலி பயன்படுகிறது. இதில் உள்ள மன அமைதிக்கான பயிற்சிகளும், தூக்கத்திற்கான இசையும் மனதை ஒருநிலைப்படுத்தி நல்ல உறக்கத்தைக் கொடுப்பதாக பலரும் பதிவு செய்துள்ளனர்.