Sunday, April 14, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க‘சி-விஜில்’ செயலி: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க‘சி-விஜில்’ செயலி: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

by Ranjith

கோவை மாவட்ட அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கலந்துகொண்டு ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில், கோவை மற்றும் பொள்ளாச்சி என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம், பயிற்சிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தேர்தலில் முறைகேடாக பண பட்டுவாடா செய்வதை தடுக்க வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

அதிகமாக பணம் வரவு வைக்கப்பட்டாலும், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டாலும் உடனடியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின்போது பணம் கொடுப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதை பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சி-விஜில் செயலி கொண்டுவரப்பட்டு உள்ளது.

இந்த செயலியின் மூலம் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பலாம். அதன் விபரம் உடனடியாக தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்டு, புகார் பெறப்பட்ட 100 நிமிடத்திற்குள் அந்த புகார் குறித்து, நேரில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள், உடல் ஊனமுற்றோர் மற்றும் வயோதிகர்கள் இந்த தேர்தலில் சிரமம் இல்லாமல் வாக்களிக்க சக்சம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க, தேர்தல் அதிகாரி வீட்டிற்கு சென்று நேரடியாக வாக்குகளை பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

nine − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi