பீஜிங்: சீனாவில் காதலன் தனது காதலிக்கு ‘லிப்லாக்’ முத்தம் கொடுத்ததால் காது வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் ‘அட்மிட்’ செய்யப்பட்டுள்ளார்.சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்ைத சேர்ந்த காதலனும், காதலியும் மேற்கு ஏரிப் பகுதிக்கு டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது காதலனும் காதலியும் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென காதலிக்கு காதில் வலி ஏற்பட்டது. அதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘காதலர் ஒருவர் தனது காதலியை தொடர்ந்து 10 நிமிடங்கள் முத்தமிட்டார். அவர் காதலிக்கு ‘லிப்லாக்’ முத்தமிட்டதால் அவரால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. முத்தத்தின் போது வேகமாக சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், காதலியின் சுவாசத்தில் சமமற்ற நிலை ஏற்பட்டது. அதனால் அவரது காதுக்கு வலி ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த காதலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் கடந்த சில ஆண்டுக்கு முன் ஒரு காதல் ஜோடி ‘லிப்லாக்’ முத்தமிட்டதால், காதலியின் செவிப்பறை கிழிந்தது. அதனால் அவரது கேட்கும் திறன் குறைந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.