தேவையான பொருட்கள்
1 லிட்டர் பால்
1 முட்டை
1 கப் சர்க்கரை
தண்ணீர் சிறிதளவு
வெண்ணிலா எசன்ஸ்
வெண்ணை சிறிதளவு
வேர்கடலை சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை உருகி வரும் போது அதில் பட்டரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் பின்பு அதில் சிறிதளவு வறுத்த வேர்க்கடலை சேர்க்க வேண்டும்.இப்போது அதை பட்டர் பேப்பரில் ஊற்றவேண்டும். அது கெட்டியானதும் அதில் சிறு சிறு துண்டுகளாக உடைத்து எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து விடவேண்டும் அதோடு சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.பால் கொதித்தவுடன் அதில் கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றி வேண்டும் பின்பு பொடித்து வைத்திருக்கும் சர்க்கரையையும் அதோடு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.சூடு தணிந்தவுடன் அதே மிக்ஸி ஜாரில் அரைக்கவேண்டும். பின்பு அதே ஒரு மணிநேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும் பின்பு மறுபடியும் எடுத்து மிக்ஸியில் அரைத்து ஃப்ரீஸரில் வைக்க வேண்டும் மறுநாள் காலை எடுத்து பரிமாறவும்.சுவையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் ரெடி.