பெரம்பூர்: மாதவரம் ஏவிஎம் நகரை சேர்ந்தவர் தேவகிருபை (57). இவர்கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலைவேலை முடிந்ததும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து தடம் எண் 29 சி என்ற மாநகர பேருந்து மூலம் பெரம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். ஜமாலயா நிறுத்தத்தில் பேருந்து நின்றபோதுஅதில் ஏறிய பெண் ஒருவர் தேவகிருபையிடம் உங்களது செயின் அறுந்துள்ளது. அப்படியே விட்டால் கீழே விழுந்துவிடும். அதை கழட்டி உங்களது பையில் வைத்துக் கொள்ளுங்கள்எனக் கூறியுள்ளார். உடனேதேவகிருபையும் தனது செயினை கழற்றிதனது பையில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பெண் தனது கையில் இருந்த சில்லரைகளை கீழே போட்டுவிட்டு அதை எடுத்து தரும்படி தேவகிருபையிடம் கூறியுள்ளார். தேவகிருபையும் குனிந்து சில்லரைகளை எடுத்துக் கொடுத்துவிட்டுபெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிமூலக்கடை வந்து அங்கிருந்து தனது கணவருடன் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டிற்கு சென்று தனது கைப்பையை எடுத்து பார்த்த போதுஅதில் இருந்த மூன்றரை சவரன் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பேருந்தில் ஏறிய பெண் தனது கைவரிசையை காண்பித்தது அப்போதுதான் தேவ கிருபைக்கு நினைவுக்கு வந்தது. இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: பெரம்பூர் துளசிங்கம் தெருவை சேர்ந்த மோகனா (44) என்பவர் ரெட்டேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்நேற்று முன்தினம் மாலைவேலை முடிந்ததும்ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டார். லூர்து பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பெண் ஒருவர்தனது குழந்தையை மோகனாவிடம் கொடுத்துவிட்டு சிறிது தூரம் கழித்து குழந்தையை வாங்கிக் கொண்டு இறங்கி சென்று விட்டார். அதன் பிறகு மோகனா ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றபோதுஅவரது கழுத்தில் கிடந்த ஒன்னே முக்கால் சவரன் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஷேர் ஆட்டோவில் தன்னுடன் பயணித்த பெண் குழந்தையை கொடுத்து மீண்டும் வாங்கும்போது செயினை அறுத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.