Sunday, April 21, 2024
Home » பஸ் தொழிலாளர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்குமா?

பஸ் தொழிலாளர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்குமா?

by Ranjith

அரசு துறைகளில் பணியாற்றுவோர் தங்களின் வாக்குகளை தபால் வாக்காக பதிவு செய்து வருகின்றனர். ஆனால், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொலைதூரப் பணியில் ஈடுபட்டுள்ள டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு மட்டும் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்காமலே இருக்கிறது. இதனால், அவர்களால் தேர்தல் நாளன்று வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வாக்குப் பதிவு விகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.

எனவே, ரயில்வே துறையில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதித்ததைப் போல அரசு போக்குவரத்து கழகங்களில் தொலைதூர பேருந்துகள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு தபால் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதும், அப்போது தான் 100 சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கை நோக்கி செல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உள்ளனர்.

You may also like

Leave a Comment

14 + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi