வடலூர்: கடலூரில் இருந்து விருத்தாசலத்துக்கு 70 பயணிகளுடன் நேற்று மதியம் தனியார் பஸ் சென்றது. வடலூர் அருகே ராசாகுப்பத்தில் வந்த போது முன்பக்க டயர் பஞ்சராகி தாறுமாறாக ஓடி எதிரே வந்த கார் மீதும், பைக்கில் சென்றவர்கள் மீதும் மோதியது. இதில் காரில் இருந்த செஞ்சியை சேர்ந்த விக்டோரியா(65) உயிரிழந்தார். கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த ஞான பிரகாசம்(52) உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
புவனகிரி அருகே சாத்தப்பாடியை சேர்ந்த தாமரைச்செல்வன் (23), விஜயகுமார்(22) ஆகியோர் நெய்வேலியில் சமையல் வேலை செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி, பஸ் சக்கரத்தின் உட்பகுதியில் சிக்கி பலியாகினர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ2 லட்சம் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.