Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதையில் பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்

விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றுபவர் அருள்மூர்த்தி. இவர் நேற்று முன்தினம் காலை சிவகாசியில் இருந்து கோவை மாவட்டம், பொள்ளாச்சிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பின்னர் பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 30 பயணிகளுடன் மீண்டும் சிவகாசிக்கு புறப்பட்டார். அப்போது மது போதையில் இருந்த அருள்மூர்த்தி, பஸ்சை தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து அருள்மூர்த்தி, உடுமலை ரோடு கோமங்கலம் புதூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையிலேயே படுத்து மட்டையாகி விட்டார். இதையடுத்து பயணிகள் கீழே இறங்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் போலீசார், அருள்மூர்த்தி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அருள்மூர்த்தி போதையில் பஸ்சை ஓட்டி சென்றது, சீட்டில் படுத்தபடி கிடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இது குறித்து விசாரணை நடத்திய விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை பொதுமேலாளர் துரைச்சாமி, டிரைவர் அருள்மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.