நெல்லை: நெல்லையில் பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல்லையில் பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் சாதி ரீதியாக மோதலில் ஈடுபடும் நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் காவல் துணை ஆணையர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பங்கேற்றனர்.