திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை அம்மணி அம்மன் தோட்டத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கலைச்செல்வன் (36). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வரும் கலைச்செல்வன், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு வாசலில் ஆட்டோ, பைக் ஆகியவற்றை நிறுத்திவிட்டு, வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஆட்டோ தீப்பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலைச்செல்வன் வந்து தீப்பற்றி எரிந்துக்கொண்டிருந்த ஆட்டோவை தண்ணீர் ஊற்றி அணைத்தார். ஆனால், பைக் மற்றும் ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.