லக்னோ: குஜராத், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் புல்டோசர் கலாச்சாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், “உத்தரபிரதேசத்தில் 2027ல் சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து புல்டோசர்களும் கோரக்பூர் நோக்கி செல்லும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், லக்னோவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அகிலேஷுக்கு பதிலளித்து முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசுகையில், “புல்டோசரை அனைவரும் இயக்க முடியாது. இதை இயக்க திறமையும், மன வலிமையும் வேண்டும். கலவரக்காரர்கள் முன் வெறுமனே சத்தம் போடுபவர்கள் புல்டோசர்களால் தோற்கடிக்கப்படுவார்கள், என்றார்.