சென்னை: தமிழக அரசு உயர்த்தியுள்ள கட்டிட அனுமதிக்கான கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது தமிழகத்தில் அனைத்து விதமான கட்டிட அனுமதிக்கான கட்டணங்களும் இரு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த கட்டண உயர்வு அனைத்தையும், பொதுமக்கள் மீது சுமத்துவதை தவிர கட்டுமான நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லை. ஒரு வீட்டிற்கு கூடுதலாக குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சீரமைப்பு என்று சொல்லிக் கொண்டு மக்கள் மீது கூடுதல் நிதியை சுமத்துவது நியாயமற்ற செயல். தேனீ எப்படி பூக்களை காப்பாற்றிக் கொண்டே தேனை எடுக்கிறதோ, அதுபோல மக்களை துன்புறுத்தாமல் அவர்களிடம் இருந்து வரியை பெற்று, அவற்றைக் கொண்டே மக்களுக்கு நல்லதும் செய்ய வேண்டும். எனவே, முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கட்டிட அனுமதிக்கான கட்டண உயர்வை ரத்து செய்ய அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்
previous post