சென்னை: கல்வியில், பகுத்தறிவில், சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டை கட்டி எழுப்புவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறந்த தமிழ்நாட்டை கட்டி எழுப்ப பேராசிரியர் க.அன்பழகன் சிலை முன்பு உறுதி ஏற்கப்பட்டது. ஆகஸ்ட் 10, 1948-ல் ஆதிக்க இந்திக்கு எதிராக மொழிப் போராட்டம் தொடங்கிய நாள் என்று கூறியுள்ளார். இனமானம் காக்கவும், மொழி உரிமையை நிலைநாட்டவும் உழைத்தவர் பேராசிரியர் க.அன்பழகன் எனவும் கூறியுள்ளார்.