சென்னை: காட்டெருமைகள் வேட்டையாடப்படுவது குறித்து விசாரணையை ஏன் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. ஊட்டி நடுவட்டத்தில் காட்டெருமைகள் மாமிசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார் எழுந்தது. விசாரணையை சிபிசிஐடி அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றவும் வனவிலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.