கேரளா: கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் சாத்திரம் கோட்டா பகுதியில் குமரா பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் எருமை மாடு வாங்குவதற்காக சென்ற போது அவர் வாங்கும் மாடு ஆரோக்கியமாக இருக்கிறதா என சோதனை செய்து கொண்டிருந்த போது திடீரென அம்மாடு மிரண்டு ஓட தொடங்கியது. அப்போது அந்த மாட்டின் கயிறு முதியோரின் இடுப்பு மற்றும் கால்களில் சிக்கி அந்த முதியவரை பல மைல் தூரம் சாலையில் இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மாடு முதியவரை இழுத்து செல்லும் போது அவரது தலை அருகில் இருந்த காரில் மோதியது. இதில் முதியவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மக்கள் எருமை மாட்டை நிறுத்தி முதியவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது ஆனால், ஆபத்தான நிலை இல்லை என மருத்துவர்கள் கூறி இருக்கும் நிலையில் அந்த வீடியோ காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.