கிருஷ்ணகிரி: பட்ஜெட்டில் அறிவித்தபடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைய உள்ளது. விரிவான திட்ட அறிக்கை, வரைபடம் தயாரிப்பு பணி, திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர். தேர்வு செய்யப்படும் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை மற்றும் 3 மாதிரி வரைபடங்களை சமர்ப்பிக்கும். நிறுவனம் அளிக்கும் 3 மாதிரி வரைபடங்களில் ஒரு மாதிரியை தமிழ்நாடு அரசு இறுதி செய்யும். 5 லட்சம் சதுர அடி பரப்பில் உயர்தர அலுவலக வசதிகளுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
பட்ஜெட்டில் அறிவித்தபடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைகிறது
0