தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் (டிஎன்சிஏ) நடைபெறும் அகில இந்திய புச்சி பாபு கிரிக்கெட் தொடரில், மத்திய பிரதேச அணியுடன் மோதிய ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. நெல்லை, இந்தியா சிமென்ட்ஸ் அரங்கில் நடந்த இப்போட்டியில், 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜார்க்கண்ட் 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி 54.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது ம.பி 225 & 238; ஜார்க்கண்ட் 289 & 3175/8.
* சேலம் கிரிக்கெட் அறக்கட்டளை மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் 139 ரன் வித்தியாசத்தில் குஜராத் கிரிக்கெட் சங்க அணியை வீழ்த்தியது. ரயில்வேஸ் 570 & 138/5 டிக்ளேர்; குஜராத் கிரிக்கெட் சங்க அணி 227 & 342. ரயில்வேஸ் பந்துவீச்சில் அயன் சவுதாரி 5 விக்கெட், ராஜ் சவுதாரி 4 விக்கெட், ஷிவம் சவுதாரி 1 விக்கெட் கைப்பற்றினர்.
* நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் சத்தீஸ்கர் – ஜம்மு & காஷ்மீர் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. சத்தீஸ்கர் 278 & 276/2; ஜம்மு & காஷ்மீர் 587/9 டிக்ளேர்.
* கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் அரியானா – மும்பை அணிகள் மோதிய போட்டியும் டிராவில் முடிவடைந்தது. அரியானா 419 & 105/6; மும்பை 245 & 321.
* நாளை மறுநாள் தொடங்கும் போட்டிகளில் ஜார்க்கண்ட் – ஐதராபாத், இந்தியன் ரயில்வேஸ் – டிஎன்சிஏ தலைவர் லெவன், அரியானா – டிஎன்சிஏ லெவன், ஜம்மு & காஷ்மீர் – பரோடா அணிகள் மோதுகின்றன.