புதுடெல்லி: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், அந்நாட்டு ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் பல ஆண்டுகளாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஆயுத மோதல்கள், பெரும் அளவில் மக்கள் இடபெயர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள காங்கோவில் அமைதி காக்கும் பணியில் ஐநா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபட 160 பேர் கொண்ட எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) குழுவை இந்தியா நேற்று அனுப்பியது. டெல்லியில் உள்ள பிஎஸ்எப் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிஎஸ்எப் படையின் இயக்குனர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தல்ஜித் சிங் பேசுகையில்,‘‘ ஆபரேஷன் சிந்தூரின் போது படை வீரர்களின் நடவடிக்கை பிஎஸ்எப்புக்கு ஒரு தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்று தந்துள்ளது ’’ என்றார். கமாண்டர் கைலாஷ் சிங் மேத்தா தலைமையிலான அமைதி காக்கும் படையில் ஒரு பெண் மருத்துவ அதிகாரி, 24 வீராங்கனைகள் உட்பட 160 பேர் உள்ளனர்.