வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அன்னுக்குடி ஊராட்சி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னிமுத்து. இவரது மகன்கள் கேசவன் (45), பாலகுரு (40). இவர்களுக்கு இடையே இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கேசவனிடம் அவரது தம்பி பாலகுரு தகராறு செய்துள்ளார்.
அப்போது தகராறை தடுக்க சென்ற கேசவனின் மனைவி சுமத்திராவை (40), பாலகுரு அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த சுமத்திரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வழக்கு பதிந்து பாலகுருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.