பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் 12வது பிளாக்கை சேர்ந்தவர் விஷ்ணு (37). சரித்திர பதிவேடு ரவுடி. கடந்த 25ம் தேதி குடிபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஷ்ணு மனைவி பிரியாவின் அண்ணன் பிரகாஷ் (எ) ஸ்டீபன், தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணுவை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் விஷ்ணு தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட அவர் நகர்ந்ததால் அம்மிக்கல் தொடை பகுதியில் விழுந்து பலத்தகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் விஷ்ணுவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷை (26), நேற்று கைது செய்தனர்.