லண்டன்: இங்கிலாந்தில் தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வெஸ்ட்மிட்லான்ட்ஸ் பகுதியில் உள்ள வால்வர்ஹாம்ப்டன் நகரில் வசித்து தொழிலதிபர் ஒருவர் வசித்து வந்தார். அவர் தனது காரில் வீட்டுக்கு சென்றபோது, இந்திய வம்சாவளியை சேர்ந்த பல்ஜித் பக்ரால், டேவிட் பக்ரால் மற்றும் ஷானு ஷானு ஆகிய 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்றுள்ளனர். அவரிடம் மிரட்டி பணத்தை பிடுங்கிக் கொண்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். கடந்த ஆண்டு நடந்த இந்த கடத்தல் சம்பவம் குறித்து வால்வர்ஹாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இதில் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த நீதிபதிகள், பல்ஜித் பக்ரால், டேவிட் பக்ரால் ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் சிறையும், ஷானு ஷானுவுக்கு 13 ஆண்டு சிறையும் விதித்து தீர்ப்பு வழங்கினர்.