உன்னாவ்: உத்தரபிரதேசத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் கான்பூர் மாவட்டங்களை இணைக்கும் விதமாக உன்னாவ் மாவட்டத்தின் சுக்லகஞ்ச் பகுதியில் கங்கா காட் அருகே 1874ம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தின் பல இடங்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டதால் கடந்த 2021 ஏப்ரல் 5ம் தேதி முதல் பாலம் முழுமையாக மூடப்பட்டது. இந்நிலையில் இந்த பாலத்தின் இரண்டு தூண்களுக்கு இடையே இருந்த ஒரு பகுதி நேற்று அதிகாலை இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது. 4 வருடங்களாக மூடப்பட்டிருந்த பாலம் என்பதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.