விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் முழுமையான செங்கல் சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைப்பாற்றின் வடகரையில் உள்ள மேட்டுக்காடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி ஜூன் 18 முதல் நடைபெறுகிறது. கிபி 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால செம்பு காசு, சங்கு வளையல்கள் உள்பட 1500 பொருள்கள் இதுவரை கண்டெடுத்துள்ளனர். இன்று நடைபெற்ற அகழாய்வு பணியின்போது முழுமையான செங்கல் சுவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர் இங்கு வாழ்ந்தது, வீடு அல்லது தொழிற்கூடம் இருந்ததற்கான அடையாளமே செங்கல் சுவர் என்று தொல்லியல் துறைனர் தகவல் தெரிவித்துள்ளனர்.