அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கடவாக்கோட்டை வட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). கிராம நிர்வாக அலுவலரான இவரிடம், பொய்யாத நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜமால்முகமது (57), பட்டா பெயர் மாறுதல் செய்ய விண்ணப்பித்துள்ளார். அதற்கு விஏஒ சதிஷ்குமார், ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து ஜமால் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனை பேரில் ஜமால்முகமது ரசாயனம் தடவிய ரூ.3ஆயிரத்தை விஏஒ சதிஷ்குமாரிடம் நேற்று கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஏஓ சதிஷ்குமாரை கைது செய்தனர்.