திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் சிவகங்கையை சேர்ந்த கந்தசாமி ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் ரூ.1 கோடியே 59 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளார். பணியை முடித்ததும் பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிலையில் சாலைப்பணிக்கான பில் தொகையை வழங்க ஒப்புதல் தெரிவிப்பதற்கு மாநகராட்சி 4வது மண்டலத்துக்கான இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார் (39) ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. முதல் கட்டமாக கந்தசாமி ரூ.1 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. மீதமுள்ள ரூ.1 லட்சத்தையும் தர வேண்டும் என்று சுரேஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் அதை கொடுக்க மனம் இல்லாத கந்தசாமி இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய பணத்தை நேற்று மாலை கந்தசாமி, சுரேஷ்குமாரிடம் வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் கைது
previous post