கடலூர்: விருதாச்சலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக விசாரணையில் பகிர் தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் 1ம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எழுத்தர்கள் சார்பதிவாளர் சங்கீதா என்பவரை சந்தித்து ஆவணங்கள் பதிவு செய்வதற்காகவும் மற்றும் இதர பதிவுகளுக்காகவும் லஞ்சமாக பணம் கொடுக்க போவதாக கிடைக்க பெற்ற ரகசிய தகவலின்படி 31.08.2023 அன்று விருத்தாசலம் 1ம் இணை சார்பதிவளார் அலுவலகத்தில் நடைபெற்ற திடீர் ஆய்வு சோதனையின்போது சார்பதிவாளர் பத்திரபதிவிற்காக பொதுமக்களிடம் லஞ்சமாக புரோக்கர் மூலம் பெற்ற பணம் மற்றும் நூதன முறையில் GPay, PhonePe வழியாக பெற்ற பணம் ரூபாய் 8,10,000/- மற்றும் ஆவண எழுத்தர்கள் பாலதண்டாயுதம் மற்றும் கந்தசாமி ஆகியோர்களிடமிருந்து சார்பதிவாளர்க்காக கொடுக்க வைத்திருந்த லஞ்ச பணம் ரூபாய். 17,000/- ம் கைப்பற்றப்பட்டது.
ஆக மொத்தம் ரூபாய் 8,27,000/- ஆகும். மேலும் திடீர் ஆய்வில் கைப்பற்றப்பட்ட பணம் ரூபாய் 8,10,000/- ஐ பற்றி சார்பதிவாளர் சங்கீதா அவர்களிடம் விசாரணை செய்ததில் ஆவண எழுத்தர்கள் மற்றும் புரோக்கர்களிடமிருந்து சார்பதிவாளர் சங்கீதா அவர்களின் உதவியாளராக (தனி நபர்) பணிபுரியம் உதயகுமார் என்பவர் லஞ்ச பணத்தை UPI பரிவர்த்தனை, GPay, PhonePe, Paytm மற்றும் பணமாக பெற்றும், இரண்டு மூன்று நாட்களுக்குண்டான தொகையை மொத்தமாக சார்பதிவாளர் சங்கீதா அவர்களின் ஆலோசனைப்படி விருத்தாசலம் பெரியார் நகரில் இயங்கி வரும் அபித்தா பழமுதிர்சோலை மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளருமான அபித்தா குமார் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளார்.
இவ்வாறு நூதன முறையில் லஞ்ச பணம் பெற்று உதயகுமார் மூலமாக மேற்கண்ட ரியல் உ எஸ்டேட் உரிமையாளர் அபித்தா குமாரிடம் இதுவரை சுமார் 42 லட்சம் கொடுத்து வைத்துள்ளதாக மேற்படி மூவரின் தொலைபேசி தொடர்பான UPI பரிவர்த்தனை மூலம் GPay, PhonePe, Paytm மற்றும் வங்கி கணக்கு எண்கள் மூலமாக விசாரணையில் தெரியவந்தது. PhonePe மூலம் பெறப்பட்ட லட்ச கணக்கான தொகை குறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு பெற்ற லஞ்சபணத்தின் மூலமாக சார்பதிவாளர் சங்கீதா அவர்கள் உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் திருப்பதி திருமலை என்ற மனைப்பிரிவில் 10 மனைகள் வாங்க பதிவு செய்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட லஞ்ச பணம் குறித்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.11/2023 ன்படி பிரிவுகள் 7, 12 ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் எதிரிகள் 1) அ.சங்கீதா, வயது 35, சார் பதிவாளர், 1ம் இணை சார் பதிவாளர் அலுவலம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம். 2) வி.உதயகுமார் (34), த/பெ.விஜயகுமார், நெ.63, செங்குந்தர் தெரு, திருமுட்டம், கடலூர் மாவட்டம். 3) ரா.குமார் (வயது 45), த/பெ.ராமதாஸ், நெ.80ஏ, நேதாஜி ரோடு, பெரியார் நகர் வடக்கு, விருத்தாசலம் வட்டம் மற்றும் நகரம், கடலூர் மாவட்டம். 4) மு.கந்தசாமி, ஆவண உரிமம் 6T600T.A/107/CDM/1996, 5) பாலதண்டாயுதம், ஆவண எழுத்தர் உரிமம் எண்.A123/CDM/1993 ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து எதிரிகள் அனைவரும் கைது பயத்தில் தலைமறைவாகி உள்ளனர் என தெரியவருகிறது.