கடலூர்: கடலூர் மாவட்டம் கிள்ளை காவல் நிலையத்தில் 2013ம் ஆண்டு சிறப்பு எஸ்ஐயாக பணிபுரிந்தவர் உதயகுமார்(63). இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சீதக்காதி வீதியை சேர்ந்த ஹமீது மரைக்கார் (54) என்பவரிடம், சாலை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்க ரூ.2500 லஞ்சம் பெற்றதாக கடந்த 2013 பிப்ரவரி 27ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் உதயகுமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ரூ.2500 லஞ்சம் சிறப்பு எஸ்ஐக்கு 2 ஆண்டு சிறை
0