விசாகப்பட்டினம்: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து பிரதமர் மோடியோகாசனங்களை செய்தார். பின்னர் “இன்று முழு உலகம் பல பகுதிகளில் பதற்றம், அமைதியின்மை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காலங்களில், யோகா நமக்கு அமைதியின் திசையை அளிக்கிறது. மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” என பிரதமர் மோடி பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது: பிரதமர் மோடி பேச்சு
0