Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காலை உணவு திட்டத்தை கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 முதல் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்டம்: தமிழக அரசு முடிவு

சென்னை: காலை உணவு திட்டத்தை கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி முதல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது. பட்ஜெட்டில் அறிவித்தபடி நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியில் இருந்து காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.