சென்னை: அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் காலை உணவுத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.600.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 2022 செப்டம்பர் முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தை ஜூலை 15ம் தேதி முதல் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.