சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் உணவின் தரத்தைப் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தீர்களா? என்று நான் கேட்பது வழக்கம். அந்த வகையில் ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவு: எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், “உங்கள் பகுதியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா?” என்று நான் கேட்பது வழக்கம். அந்த வகையில், ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன். காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல, நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
காலை உணவுத்திட்டம் ஆய்வு ஆசிரியரே செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
0