சென்னை: காலை உணவு திட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல, உலகளாவிய திட்டம், காலை உணவு திட்டத்தை மற்ற மாநிலங்களில் விளம்பரம் செய்வதில் எந்த தவறும் இல்லை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஒரு திட்டத்தின் மூலம் பயன் கிடைக்கும் என்றால் அனைத்து மாநிலங்களுகும் கொண்டு செல்வதில் தவறில்லை. காலை உணவு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தும் வகையில் உள்ள சிறப்பான திட்டம் என அமைச்சர் தெரிவித்தார்.