ஜெருசலேம்: காசாவில் செயல்பட்டு வந்த பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா சபையின் உதவி அமைப்புடனான ஒப்பந்தத்தை இஸ்ரேல் முறித்துக்கொண்டுள்ளது. இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பில் பல்வேறு நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. காசாவில் உதவிகளை வழங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்துக்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.
ஐநா சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தில் ஹமாஸ் ஆதரவாளர்கள் ஊடுருவியுள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. எனினும் இஸ்ரேலின் இந்த கூற்றை ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் தான் நடுநிலையுடன் செயல்படுவதை உறுதிபடுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.