Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

பிரேக் செஸ் சாம்பியன்ஷிப் எட்டும் தூர வெற்றியை தட்டி விட்ட குகேஷ்: சாதுரியமாக வீழ்த்திய நோடிர்பெக்

பிரேக்: பிரேக் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவிடம் தோல்வியை தழுவினார்.

செக் குடியரசின் பிரேக் நகரில், பிரேக் சர்வதேச செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் மோதினர். கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் காணப்பட்டார். அப்போது அவர் செய்த சிறு தவறால், போட்டி திசை மாறி, கடைசியில் அப்துஸட்டோரோவ் வெற்றி பெற்றார். சமீபத்தில் நடந்த டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின்போதும், அப்துஸட்டோரோவுக்கு எதிராக வலுவான நிலையில் இருந்த குகேஷ், கடைசியில் அந்த போட்டியிலும் மோசமான தோல்வியை தழுவி இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவரிடமே தோல்வி அடைந்துள்ளார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹான்ஸ் நீமான், டென்மார்க் கிராண்ட் மாஸ்டர் ஜோர்டென் வான் ஃபாரீஸ்ட்டிடம் தோல்வியை தழுவினார். 4 சுற்றுகள் முடிவில் ஹான்ஸ் நீமான் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அப்துஸட்டோரோவ், செக் வீரர் டேவிட் நவாரா 3.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், அரவிந்த் சிதம்பரம் தலா 1.5 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளனர்.