தேவையான பொருட்கள்
5பிரட் துண்டுகளாக நறுக்கியது
1/2 கப் கன்டெஸ்டு மில்க்
பாதாம் பிஸ்தா முந்திரி நொறுக்கியது 3 டேபில்ஸ்பூன்
சூடான பாலில் ஊறவைத்த 10 குங்குமப்பூ இதழ்கள்
1/2 லிட்டர் பால்
செய்முறை:
கடாயில் பால் ஊற்றி கொதிக்க விடவும்.கொதி வந்ததும் கன்டெஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.
பின்னர் 5 நிமிடத்தில் ஊறவைத்த குங்குமப்பூ பால் நட்ஸை சேர்த்து கலக்கவும்.மிதமான சூட்டில் 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.ஆறியவுடன் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்தவுடன் பிரட் துண்டுகளை போட்டு பறிமாறவும். குளிர்ந்த சுவையான பிரட் ரசமலாய் தயார்.