திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள முழுநேர மாதிரி கிளை நூலகத்தில் 57வது தேசிய நூலக வார விழா நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் திருவள்ளூர் ரோட்டரி சங்கம் இணைந்து புத்தகக் கண்காட்சியை நடத்தியது. நூலகர் சீ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி சங்கத் தலைவர் எச்.ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், ரோட்டரி பயிற்சியாளர் அர்ஜுனா அ.குமரன், முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.திராவிட மணி, இளைஞர் பிரிவு இயக்குனர் வி.தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் ஆசிரியர் சாந்தகுமாரி, வாசகர் வட்ட தலைவர் பேராசிரியர் ச.ச.குமார், வாசகர் வட்ட உறுப்பினர்கள் புழ.ராமலிங்கம், என்பிஎஸ்.மணியன், சுகுமாரன், எம்.ரேவதி, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மணவாளர்கள் தொழிலதிபர் பித்தன் ஏற்பாட்டில் ரோட்டரி சங்கத் தலைவர் எச்.ஜெயபிரகாஷ், பயிற்சியாளர் அர்ஜுனா அ.குமரன், சரவணன், ஆர்.எஸ்.திராவிட மணி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.