பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீதும் அவர் தந்தை ரேவண்ணா மீதும் இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாக உள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய ஏற்கனவே சிறப்பு புலனாய்வு படை அதிகாரிகள் நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பெற்றுள்ளனர். மேலும் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்க உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி சிறப்பு புலனாய்வு படை அதிகாரிகள் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.