கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம், அண்ணா காலனி, ரோஜா தெருவை சேர்ந்தவர் அப்துல்லத்தீஷ். இவருக்கு மனைவி அப்பாஸ்அலி(40), மகன்கள் அன்சாரி (17), சாதிக்அலி (15) ஆகியோர் உள்ளனர். இதில், அப்பாஸ்அலி தனியார் கம்பெனியில் வேலை செய்து இரண்டு மகன்களையும் கவனித்து வருகிறார். இதில் சாதிக்அலி பத்தாம் வகுப்பு முடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி சாதிக்அலி தன்னுடைய செல்போனுக்கு ரீச்சார்ஜ் செய்யும்படி அவரது அம்மாவிடம் கேட்டுள்ளார். இதில் சரிவர படிக்காமல் எந்நேரமும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாது என்று அவரது அம்மா கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த சாதிக்அலி தனது செல்போனை வீட்டில் வைத்துவிட்டு மாயமாகிவிட்டார் இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.